3கோடி மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமைப்பை அகற்றி கணினி வரிவசூல் மையம் அமைக்க கோரி, 70வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி குடியிருப்போர் நல சங்கத்தினர் உடன் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாநகர் 70வது வார்டில் திமுக மாநகராட்சி மன்ற உறுப்பினராக அமுதா தவமணி இருந்து வருகிறார். அவர் இன்று அப்பகுதியில் உள்ள வேல்முருகன் நகர், துரைசாமி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் உடன் வந்து மாநகராட்சி ஆணையாளரிடம் நேரில் மனு அளித்தனர்.
அதில் கூறியதாவது..,
70 வார்டு வேல்முருகன் நகர் பகுதியில் உள்ள தாமிரபரணி தெரு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 3 கோடி மதிப்புள்ள 10 சென்ட் ஓ எஸ் ஆர் இடம் அக்கிரம்பில் உள்ளது. அதை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு தர வேண்டும்.

மேலும், இப்பபகுதியில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் மாநகராட்சி பணிகள் சம்பந்தமாக வார்டு உதவி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினரை சந்தித்து, மனுக்கள் கொடுப்பதற்கோ அல்லது மாநகராட்சி செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்துவதற்கோ வெகு தொலைவில் உள்ள பழங்காநத்தம் அமைந்துள்ள அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், மாமன்ற உறுப்பினர் அலுவலகம் , கணினி வரிவசூல் மையம், சிறுவர் பூங்கா ஆகியவை கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் கண்டிப்பாக மாநகராட்சி ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, அப்பகுதி மக்களுக்கு தேவையான அலுவலகத்தை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, உடனே நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தாக தெரிவித்தார்.












; ?>)
; ?>)
; ?>)