• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மறைந்த ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்!

ByKalamegam Viswanathan

Mar 26, 2025

மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி என்பவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமாகி நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்து 400 க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.

இதனிடையே அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து அவரது உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட நிலையில் அவரது உறவினர் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பொதுமக்கள், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் போலந்து நாட்டில் உள்ள அவரது உடன் பிறந்த சகோதரர் என காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.