• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்…

ByPrabhu Sekar

Mar 25, 2025

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும், அழகியலையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை தமது செல்லுலாய்ட் கண்களால் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

சினிமாவை செட்டுக்குள் பார்த்து பார்த்து வறண்டு போன கண்களுக்கு, கிராமத்து வீடுகளுக்குள் புகுந்து, இயற்கை அழகை கேமராவில் புகுத்தி “என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா “எனும் அந்த கம்பீரமான குரல் தமிழர்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை நினைவூட்டும்.

பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தனது இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம், தனது மகன் மனோஜ் பாரதிராஜவை அறிமுகப்படுத்தினார். அந்த படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், ஈரநிலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் அவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இதனால், சில காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மனோஜ் பாரதிராஜா, சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் சற்று முன் மாரடைப்பால் காலமானார். மனோஜூக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்.