சென்னை மாநகரில் இன்று காலை கிண்டி சைதாப்பேட்டை திருவான்மியூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. முகமூடி அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்,
பின்னர் இது குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போலீசார் அனைத்து ரயில் நிலையங்கள் விமான நிலையத்தில் போலீசாரை உசார்படுத்தி தீவிர சோதனை மற்றும் விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி முனையத்திற்கு தப்ப முயன்ற நிலையில் தனிபடை போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் சூரஜ் மற்றும் ஜாபர் என்பதும் இவர் இருவதும் குறிப்பிட்ட நாட்களில் விமானங்களில் சென்னை வந்து விட்டு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு மீண்டும் விமானத்தில் வட மாநிலத்திற்கு தப்பி செல்வதை வழக்கமாக வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த பொங்கல் தினத்தன்று தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் எட்டு இடத்தில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் இவர்களும் ஒரே நபராக என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.