• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றத்தை நடத்த ஆளும் கட்சியினருக்கு விருப்பமில்லை -காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Byஜெ.துரை

Mar 24, 2025

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து, அமளியில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்தை நடத்த விருப்பமில்லை என ஆளும் கட்சியினர் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

பல நாட்கள் கடந்து விட்ட பிறகு ஆளும் கட்சியினர் பிரச்சனை ஏற்படுத்த ஒரு காரணத்தை கண்டு பிடித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.