கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கோரிக்கை மனு அளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு ஆர்.என்.சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆய்வில் பங்கேற்ற மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஆர் சுதா, மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமையலாளருக்கு மனு அளித்தார் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமதி ஆர் சுதா,
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணியை பற்றி ரயில்வே துறை அமைச்சரிடம் பேசி இருந்தேன். அவர் அறிவுறுத்தலின்படி தற்போது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.சிங் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். மயிலாடுதுறை மக்கள் என்னிடம் கொடுத்த கோரிக்கையை நான் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தேன். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆய்வு நடைபெற்றிருக்கிறது.இனிவரும் காலங்களில் ரயில் நிலைய சந்திப்பு பற்றிய பணிகள் முழுமையாக நடைபெற்று முடிக்கப்படும் தரமான பணியை மேற்கொள்வோம் என ரயில்வே பொது மேலாளர் கூறியிருக்கிறார்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவையானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது கும்பமேளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டபோது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நிறுத்தியதனால் இன்னும் அதனை நம் பகுதிக்கு அனுப்பி வைக்கவில்லை அதற்கு மனு அளித்திருக்கிறேன் இனிவரும் காலங்களில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 7 நாட்கள் சேவை செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
மயிலாடுதுறை ரயில் நிலைய மேம்பாலம் அமைப்பதற்கான வேலைகள் முழு வீட்டில் செய்யப்பட்டு வருவதாகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது ஓராண்டுக்கு மேலாக அதற்கான பணிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதனால் சில இடங்களில் ரயில்வே கிராசிங் லிவர் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது அதற்காகவும் மனு அளித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.