• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருட்டு வாகனத்தை கண்டுபிடித்த காவல் உதவி ஆய்வாளர் ஆணையாளர் பாராட்டு..

ByKalamegam Viswanathan

Mar 21, 2025

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லிங்ஸ்டன்… தலைமை காவலர் விஜயன், முகமது ரபீக்… ஆகியோர்கள் சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மாட்டுத்தாவணி காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் காணாமல் போன திருட்டு வாகனம் திருடிய நபர் வாகனத்தை ஓட்டி வந்ததை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் உடனடியாக அவரை திலகர் திடல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

வாகன சோதனையில் போது சிறப்பாக செயல்பட்டு திருட்டு வாகனத்தை பறிமுதல் செய்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாகனத்தை பறிமுதல் செய்ய உதவிய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாநகர ஆணையாளர் முனைவர் லோகநாதன் பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கினார்.