• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எதையும் எதிர்பார்க்காதே!

Byவிஷா

Nov 29, 2021

ஒரு முறை ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சீடர்கள் துறவியிடம், கதை கூறுமாறு கேட்டனர். அதற்கு அந்த துறவியும், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை பாடம் புகட்டும் வகையில் கதை சொல்ல ஆரம்பித்தார்.


“ஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து கொண்டு சென்றான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவன், அவனை நிறுத்தி, “என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான்.
பின் “உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்த போது, நான் என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் பணம் கேட்டேன். அதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவரின் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்று வாழ்த்தி கொடுத்து உதவி புரிந்தீர்கள்” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினான்.


அந்த வியாபாரியும் சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஆம், நினைவுக்கு வந்துவிட்டது என்று சொல்லி, வேறு என்ன சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான்.


அதற்கு அவன் “இல்லை எப்படி அப்போது எனக்கு பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதே போல் இப்போதும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான்.
அந்த வியாபாரி இப்படி கேட்டதும் வியந்து போனான்.” என்று சொன்னார்.
பின்னர் தன் சீடர்களிடம், ஒருவர் தமக்கு ஒரு முறை எதிர்பாராமல் உதவி செய்தால், மீண்டும் மீண்டும் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. நமக்கு எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால், நிச்சயம் அது நமக்கு கிடைக்கும் என்று சொன்னார்.