• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முன்பதிவில்லாத ரயில்களுக்கான பயணச் சீட்டு எடுக்கும் ‘ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச்’

BySeenu

Mar 20, 2025

*சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையம் சார்பில் முன்பதிவில்லாத ரயில்களுக்கான பயணச் சீட்டு எடுக்கும் Unreserved Ticketing System (UTS) எனும் மொபைல் செயலியை பிரபலப்படுத்த ‘ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச்’ எனும் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதில், சிறந்த வீடியோவாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இப்போட்டி குறித்த அறிமுக நிகழ்வு மற்றும் UTS மொபைல் செயலி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கோவை ரயில் நிலைய இயக்குனர் சச்சின் குமார், வணிகப் பிரிவு துணை மேலாளர் சதீஷ் சகாதேவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

“நாட்டில் முதல் முறையாக யூ.டி.எஸ் மொபைல் செயலியை பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச் போட்டி சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கோவை ரயில் நிலையத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம்.

யூ டி எஸ் மொபைல் செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், குறிப்பாக நீண்ட வரிசையில் காத்து இருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கும் முறை குறித்தும் சிறப்பான முறையில் தயாரித்து அனுப்பப்படும் 1 நிமிட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் அதிக பார்வைகளைப் பெறும் வீடியோக்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆகும். இதற்கான க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து போட்டியாளர்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எந்த மொழியிலும் வீடியோ உருவாக்கி அனுப்பலாம்.

யூ டி எஸ் மொபைல் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்த போதும் அதன் பயன்பாடு குறைவாக இருப்பதால், அதனை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள யூ டி எஸ் மொபைல் செயலியின் மூலம் பேப்பர் பயன்பாடு இல்லாத, எளிய முறையில், முன்பதிவில்லாத ரயில்களுக்கான டிக்கெட்டை வேகமாக பெற முடிகிறது.