தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட லோயர்கேம்ப், கம்பம் கிளை 1, கிளை 2 ஆகிய கிளைகளில் பணியாற்றும் ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் ஆதிமூலம் முன்னிலை வகித்தார். 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடித்து நிறைவேற்ற வேண்டும்.
தேனி மாவட்டத்தில் நெருக்கடியான சாலையாக உள்ள தேனி, குமுளி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும். நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக காவல்துறை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும். பஸ்டாண்டுகளில் பஸ்களை தவிர்த்து மோட்டார் சைக்கிள் உட்பட இதர வாகனங்களை நிறுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் தேனிமாவட்ட ஐஎன்டியுசி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் முகம்மது இர்பான், நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் போஸ், சிறுபான்மை பிரிவு மாவட்டதலைவர் ராஜாமுகமது மற்றும் கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து- கொண்டனர்.