கன்னியாகுமரியில் இருந்து இன்று (மார்ச்20) அதிகாலை மணி 5க்கு மங்களூர் செல்லும் “பரசுராம் எக்ஸ்பிரஸ் இரயில் இரணியல் ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்திற்கிடையே “கற்கள்” வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைக் கண்ட லோகோ பைலட் ரயிலை நிறுத்திவிட்டு இரணியல் ரயில் நிலையம் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

இதன் பின் இரணியல் ரயில் நிலையத்திலிருந்து பரசுராம் எக்ஸபிரஸ் இரயில் புறப்பட்டு சென்றது.
இது குறித்து ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.