நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள சிறியூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை மகா பூகுண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது . வளங்கள் செழிக்கவும் மழை பொழிக்கவும் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர்.

நீலகிரி மாவட்டம் உதகை மசினகுடி அருகே உள்ள பேசும் தெய்வம் என்று அழைக்கப்படும் சிறியூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் இந்த ஆண்டு திருவிழா துவங்கியது.
இதனைத் தொடர்ந்து வளம் பெருகவும், மழை பொழிக்கவும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று காலை 7:00 மணிக்கு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றன.வருடாந்திர திருவிழாவில் உள்மாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.