• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வசூல் சாதனைப் படைத்த ‘டிராகன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ByP.Kavitha Kumar

Mar 18, 2025

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வசூல் சாதனைப் படைத்த ‘டிராகன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்த ‘டிராகன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது கடந்த மாதம் 21-ம் தேதி வெளியான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனோடு அனுபமா பரமேஸ்வரன, கயாடு லோகர், மிஷ்கின், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள் இப்படம் வணிக ரீதியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ப்படத்தில் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் அவருடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார்

இந்த படம் கடந்த 14-ம் தேதி இந்தியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘டிராகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.