• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்து….

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி. இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனது உறவினர் ஒருவர் இறந்து விட்ட நிலையில் அந்த துக்க நிகழ்வுக்கு கங்கைகொண்டான் பகுதியில் இருந்து தன்னுடைய உறவினர்கள் 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் அருள்மொழியும் வேனில் சென்றுள்ளார்.

அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நள்ளி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அருள்மொழி சென்ற வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அருள் மொழியின் உறவினர் ஸ்டாலின் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வேனில் காயத்துடன் சிக்கி இருந்த நபர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ஸ்டாலின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மதுரை தேசிய நெடுஞ் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் மீட்பு பணி முடிந்த பின்னர் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.