• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை துவக்கம்

BySeenu

Mar 16, 2025

கோவையில் உலகத்தரம் வாய்ந்த வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை புதிய கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வடமலை திறந்து வைத்தார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் முதல் NABH-அங்கீகாரம் பெற்ற செரிமான நலத்துறை சிகிச்சை (காஸ்ட்ரோ) மருத்துவமனையான கோவை VGM மருத்துவமனை இப்போது மேம்பட்ட வசதிகள் மற்றும் புதிய சிறப்புகளுடன் பல்துறை மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் மையமாக இன்று உருவெடுத்தது.
இரைப்பை மற்றும் கல்லீரல் சிகிச்சை பிரிவில் நாட்டிலேயே உள்ள மூத்த மருத்துவ நிபுணர்களில் ஒருவரான டாக்டர் V.G. மோகன் பிரசாத் அவர்களால் நிறுவப்பட்டு வழி நடத்தப்பட்டு வரும் இந்த மையம் 16 ஆண்டுகளாக செரிமான நலத்துறை சிகிச்சையில் தனிமுத்திரை பதித்து, இப்போது பல்துறை மருத்துவ சிகிச்சைகளில் கால் பதித்துள்ளது.

இப்போது, VGM மருத்துவமனையில் 6 தளங்கள் கொண்ட புது கட்டிடத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இருதயவியல் சிகிச்சை & கேத் லேப், பிரத்யேக கல்லீரல் ஐ.சி.யூ., டயாலிசிஸ் மையம், இன்டர்வென்ஷனால் ரேடியாலஜி மற்றும் பிரத்யேக உள்நோயாளிகளுக்கான அறைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்த புது வளாகத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரு. வடமலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த வளாகத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழக ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர் சஹாய் மீனா, ஐஏஎஸ், தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜி. பிரகாஷ், ஐஏஎஸ்; தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.வீரராகவ ராவ், ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

டாக்டர் VG மோகன் பிரசாத் அனைவரையும் இந்த துவக்க விழாவிற்கு வரவேற்றார். 2009ம் ஆண்டில் 30 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை துவக்கப்பட்டு, 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் முதல் விரிவாக்கம் நடைபெற்றதாக கூறினார். அதை தொடர்ந்து இப்போது இந்த மருத்துவமனை ஒரு பல்துறை சிறப்பு மையமாகவும் 150 படுக்கை வசதி கொண்ட உலக தரம் கொண்ட மருத்துவமனையாகவும் உருவாகி உள்ளது என குறிப்பிட்டார். இந்த மருத்துவமனை வரும் நாட்களில் பன்மடங்கு உயர்ந்து, மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்கும் என தெரிவித்தார்.

நீதியரசர் வடமலை பேசுகையில், தானும் டாக்டர் மோகன் பிரசாத் போல உடுமலைப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இந்த மருத்துவமனை இன்று அடைந்துள்ள உயரத்தை எண்ணி பெருமைபடுவதாக கூறினார்.பல்துறை சிறப்பு மருத்துவமனையாக VGM உயர்ந்துள்ளதால் வெவ்வேறு உடல் நலக் குறைபாடுகள் உள்ள பல நோயாளிகள் பெரும் பயனடைவார்கள் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

முதன்மைச் செயலாளர் வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். பேசுகையில்,

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் சேவையை அறிமுகம் செய்தது பாராட்டிற்குரியது என்றார். மேலும் இந்த சேவையை அனைவரும் பெறும் வகையில் வழங்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவர்களை தொடர்ந்து ஹர் சஹாய் மீனா, ஐ.ஏ.எஸ். மற்றும் டாக்டர் நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் கோவையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா, ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, கே.எம்.சி.எச். மருத்துவமனையின் எக்சிகியூடிவ் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், கோவை ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

VGM மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், எண்டோஸ்கோபி துறையின் இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, ஹெப்பாட்டோலாஜி துறை சிறப்பு நிபுணர் டாக்டர் மித்ரா மற்றும் ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.