கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக திருப்பணி குழுக்கமிட்டியினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று திருப்பணி வேலைகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு திருப்பணி குழுக்கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)