• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை

ByP.Kavitha Kumar

Mar 12, 2025

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நாளை (மார்ச் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை நாளை மறுநாள் (மார்ச் 14 ) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவின்படி, ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாளான நாளை (மார்ச் 13) மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹோலி பண்டிகை தினமான மார்ச் 14-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை விடுமுறை அறிவிப்பை ஈடுகட்ட மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமையன்று அவையை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.