மதுரையைச் சேர்ந்தவர் மகபூப் ஜான், இவரது மகன்
முகமது ரிஃபாய் மதுரையில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பிறந்தது முதலே செவித்திறன் குறைபாடு கொண்ட இவர் இரவு பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பயிற்சி எடுத்து கடந்த 2022ல் தேசிய அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.
மாணவன் முகமது ரிஃபாய் சாதனையைப் பாராட்டி தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் அவர்கள் ஊக்கத்தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கினார். இந்நிலையில், வரும் 22.03.25 -ல் குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் முகமது ரிஃபாய்
கலந்து கொள்கிறார். போட்டியில் மாணவர் வெற்றி பெற வாழ்த்தியதோடு எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மாணவனின் தந்தை மகபூப் ஜான் – ஐ மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாணவனுக்கு ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.
இதுகுறித்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கூறுகையில், முகமது ரிஃபாய் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவன், இறகுப்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கு ஊக்கத்தொகையாக நான் ரூபாய் 10 ஆயிரம் வழங்கினேன். அந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று பெருமை சேர்த்தார். தற்பொழுது எதிர்வரும் 22 ஆம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இம்முறையும் அவரை அழைத்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தி ஊக்கத்தொகை வழங்கி உள்ளேன் என்றார்.