• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் மனைவியை டார்ச்சர் செய்த கணவர் சிறையில்..!

Byவிஷா

Nov 27, 2021

தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக, மனைவியின் சிறுநீரகத்தை விற்கச் சொல்லி டார்ச்சர் செய்த கணவர் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஏதாவது ஒரு வகையில், பணத்தேவை என்பது எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக, பலரும் பலவிதங்களில் முயற்சி செய்வார்கள். ஆனால், தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக மனைவியின் சிறுநீரகத்தை விற்க முயற்சித்த கணவர் இப்போது சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார்.


மனைவியின் சிறுநீரகத்தை விற்பதில் பிடிவாதமாக இருந்த கணவர், அதை வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும் கேட்கவில்லை. சிறுநீரகத்தை கொடுக்க மறுத்த மனைவியையும், குழந்தைகளையும் கடுமையாக தாக்கியுள்ளார் இந்த கொடுமைக்கார மனிதர்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சஜன் என்பவர் தனது கடனை அடைக்க மனைவியிடம் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க கேட்டுள்ளார்.

அதற்கு முதலில் மனைவியும் ஒப்புக் கொண்டார். பிறகு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவி மறுத்துள்ளார். ஆனால் அதற்கு கோபப்பட்டு, தொடர்ந்து வற்புறுத்திய கணவன், பிறகு குழந்தைகளையும், மனைவியையும் போட்டு மிருகத்தனமாக அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த மனைவி போலீசில் புகார் கொடுத்தார். அதையடுத்து கணவர் சஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சஜனுக்கு 4 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்தது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரகத்தை கொடுத்தால், ஈடாக அவருக்கு 9 லட்சம் கிடைக்கும், எனவே மனைவியின் சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்துவிட்டு, எஞ்சிய பணத்தை கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று சஜன் திட்டமிட்டார்.

கேரளாவில் உறுப்பு நன்கொடையாளர்களைத் தேடும் முகவர்கள் அதிகம். சிறுநீரகத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்ட பிறகு, நன்கொடையாளர் பல சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவசரமாகத் தேவைப்படுபவர்களுக்கு சிறுநீரகங்கள் விற்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் நிதர்சன சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.