பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு தலைவர் சு.மனோகரன் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் முன்னிலையிலும், தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தெய்வா அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக கௌரவ தலைவர்கள் சுருளிப்பட்டி பொன். காட்சிக்கண்ணன், ஆர்.சி சிவமணி கம்பம் ஆகியோரும், உபதலைவர்கள் – மேகமலை ஜெயக்குமார், கூடல் ராஜீவ் காந்தி, வி.எஸ்.முருகேசன் கம்பம் ஆகியோரும் செயலாளராக சாமிநாதன் டி.சிந்தலைச்சேரி, துணை செயலாளர்களாக
ராயப்பன்பட்டி கு.அருள் ஜீவா, முத்துகிருஷ்ணன்-கம்பம், கோட்டூர் ராஜா, பொருளாளர்
பா.ராதா கணேசன்- போடிநாயக்கனூர் ஆகியோர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், தேனி மாவட்ட தலைவராக சீலையம்பட்டி பழனிச்சாமி, செயலாளராக கண்ணன் கம்பம், மாவட்டதுணை செயலாளர் சின்னமனூர் பாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழக்கடை கணேசன் கம்பம், கே. பி. தங்கராஜ் கானா விலக்கு, ஐந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக சாமிநாதன்-கம்பம் சரவணன்-கம்பம், செயற்குழு உறுப்பினர்கள். சுப்பையா, சேகர், ராஜலிங்கம், பாஸ்கரன் (குரங்கனி), பரமசிவன். கம்பம் பாஸ்கரன், மருத்துவர் நீலவண்ண நாகராஜா, பொறியாளர் சரவணகுமார், கம்பம் பார்த்திபன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் கூறுகையில், நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றுள்ளது. விரைவில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிராம அளவிலான நிர்வாகிகள் தேர்வு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும், முல்லைப் பெரியாறு அணை காக்க, ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் காக்க,இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள், களத்தில் நிற்பார்கள், போராடுவார்கள் என்றார்.