சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி சாமி தரிசனம். செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏவுமான ராஜலட்சுமி தனது பிறந்த நாளை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு இன்று வந்திருந்து சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் சிலரும் சேர்ந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் முடித்தவுடன் கோயில் பிரகார வீதியில் வலம் வந்த முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி கோயிலின் வெளியே வந்து கடை வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடம் பேசினார்.