விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனி சேர்ந்த பொண்ணு வயது 40. இவரது மனைவி முனீஸ்வரி 35. பட்டாசு தொழிலாளிகள் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது. காலை மீண்டும் இருவருக்குள் ஏற்பட்ட சச்சரவு காரணமாக பொண்ணு மனைவி முனீஸ்வரியை அடித்து உதைத்து, பின்னர் மோட்டார் சைக்கிள் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தலைமறைவாகிவிட்டார். தொழுதுவிட்டு சிறிது நேரத்தில் முனீஸ்வரி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் செண்பகவாலன், ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி முனீஸ்வரி உடலை சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மகள்கள் உள்ளனர். காலையில் நடந்த கொலை காரணமாக இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




