வளமான இந்தியா பாதுகாப்பான கடற்கரை என்பது குறித்து சைக்ளோத்தான் விழிப்புணர்வு வரும் ஏழாம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்கிறார் என மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணன் மீனம்பாக்கத்தில் பேட்டியில் தெரிவித்தார்.
பாதுகாப்பான கடற்கரைகள், வளமான இந்தியா என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலோர சைக்ளோத்தான் மார்ச் 7 ம் தேதி குஜராத் லக்பத் கடற்கரை பகுதியில் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..

இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 125 பேர் 25 நாட்களில் 11 மாநிலங்களைக் கடந்து 6553 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டா சென்னை வழியாக கன்னியாகுமரி வரை சைக்ளோத்தான் நடைபெற உள்ளது.
இதற்கான பத்திரிக்கையாளர் கலந்தாய்வு கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணன் டி ஐ ஜி அருண் சிங் தென் மண்டல டி ஐ ஜி பொன்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.ஜி சரவணன்
தமிழ்நாட்டில் ஏழு நாட்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள இருகிறார்கள் இறுதியில் கன்னியாகுமரியில் இந்த சைக்ளோத்தான் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம் குறிப்பாக ஐந்து கிலோ மீட்டர். இரண்டு கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் என எத்தனை தூரம் வேண்டுமானாலும் உங்களுடைய உடல் தன்மைக்கு ஏற்றவாறு இதில் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க உள்ளோம்.
கடர்க்கரைப் பகுதிகள் மீனவ கிராமங்கள் என அனைத்து பகுதிகளையும் இந்த சைக்ளோதான் சென்றடைய உள்ளது போதை குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான கடற்கரை வளமான இந்தியா என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறுகிறது.
இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 125 பேர் 25 நாட்களில் 11 மாநிலங்களைக் கடந்து 653 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளனர் இவ்வாறு தெரிவித்தார்.