தமிழகத்தில் தமிழக அரசு இரண்டு மொழிக் கொள்கையை பின்பற்றி வரும் நிலையில்.ஒன்றிய அரசு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவதாக ஒரு மொழியை கற்பிக்க வேண்டும் என்கிற வற்புருத்தலுக்குப்பின், மறைமுகமாக”இந்தியை”திணிக்கும் மோடி அரசின் செயலை கண்டித்து,

கன்னியாகுமரி ரவுண்டானா அண்ணா சிலையின் முன்பாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த நிகழ்வில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,நிசார்,பூலோகராஜா, அன்பழகன், ராயப்பன்,கெய்சர்கான் உட்பட ஏராளமான கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
