• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byadmin

Feb 24, 2025

எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுச் சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள்.

ஆர்வமாய் கேட்கப்பட்ட வார்த்தைகள் அலட்சியமாய் தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள் அது நமக்கான இடமல்ல.

தொடந்து பேசினால் வார்த்தைகள் எல்லை மீற கூடும் எனத் தெரியும் போது உரையாடலில் விடை கொடுப்பதும் ஒழுக்கம் தான்.

நிதானம் தவறினால் நிம்மதியில்லை. வாக்கு தவறினால் மரியாதையில்லை.
சிந்தனை இல்லையெனில் சிறப்புகள் இல்லை.

நீங்கள் விரும்பிய நபரை இழக்க நேரிடலாம், உங்கள் உடமைகள் பறி போகலாம், ஆனால் என்ன நடந்தாலும் உங்களை நீங்கள் இழக்கக் கூடாது.

உங்களின் தன்னம்பிக்கை தளர்ந்துப் போகவே கூடாது.

திருமணமான பெண்களின் நீண்ட நேர தூக்கத்திற்கு உகந்த இடம்.

தாய் வீடு மட்டுமே………

வேறெங்கும் கிளைகள் இல்லை………….!!

வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரியும் போது………

மௌனம் புன்னகையாகும்………
பேச நிறைய உள்ளது……….

பேசாமல் கவனிக்கத்தான் யாருமில்லை………!!
இருப்பது போதுமென்று நீங்கள் நினைத்தால்,

உங்களுக்கு நிம்மதி உறுதியாக இருக்கும்…