விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரை, சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள், ஆபரணங்கள், ஆட்ட காய்கள், சில்லுவட்டுகள், கல்மணிகள், சூது பவளமணி, உள்பட ஏராளமான மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
ஆவணப்படுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் கூடுதலாக மண்பானையில் அச்சு பதிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன்.பாஸ்கர் தெரிவித்தார்.














; ?>)
; ?>)
; ?>)