• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

BySeenu

Feb 22, 2025

50 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், போடா வாடா என்று அழைக்கும் போது 50 ஆண்டு பின்னோக்கி சென்று விட்டதாக முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ழ்சியில் கலந்து கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இதற்கான திட்டத்தை ஏற்படுத்தி இன்று அனைவரும் ஒன்று கூடியது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

அது மட்டுமில்லாமல் 1975-ம் ஆண்டு இவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை எட்டு பேரை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து தலா அவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும் நிதி வழங்கினார்கள் மேலும் மீதமுள்ள நான்கு ஆசிரியர்கள் வர முடியாத காரணத்தினால் அவர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று நிதி வழங்க இருப்பதாகவும் முன்னாள் மாணவர்கள் சார்பாக சபர்பன் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பள்ளிக்கு நீதி வழங்கி உள்ளனர்.

பொதுவாக எங்கள் அனைவரையும் ஐயா,சார்,போங்க வாங்க என்று அழைப்பார்கள்.ஆனால் இந்த சந்திப்பில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களை சந்தித்த போது அனைவரும் போடா வாடா என்று பேசியது மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் இந்த நாளை வாழ்க்கையில் மறக்க முடியாது நாள் எனவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் இந்த பள்ளியில் படித்த காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை அனைத்தையும் ஒன்று சேர்ந்து புத்தகமாக வெளியிட்டனர்.