வாராணாசியில் ரயிலில் கூட்ட நெரிசலால் தமிழகம் திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் தவித்து வருகின்றனர்.
உத்திர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து கொண்ட நிலையில், இன்று (20.2.2025) நள்ளிரவு ஒரு மணி அளவில் ரயில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் ஏசி கோச்சில் சென்னை செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர்.
அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதால் தொடர்ந்து ரயில்களில் கடும் கூட்ட நெரிசலில் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியாமல் வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் வெளியில் உட்கார்ந்து உள்ளனர். தமிழகம் வர அரசு உதவி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களை விமானம் மூலமாக சென்னை அழைத்து வர விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்
