• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை இன்று எதிர்கொள்கிறது வங்கதேசம்

ByP.Kavitha Kumar

Feb 20, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.

எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மோதின. இதில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.

இந்தியா அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி இடம் பெற்றுள்ளனர். வங்கேதச அணியில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிருதய், முஷ்பிகர் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹுசைன் எமோன், நசும் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், நஹித் ராணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, வங்கதேசம் இதுவரை 41 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இந்தியா 32 வெற்றிகளும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இன்றைய போட்டியில் வலுவாக உள்ள இந்திய அணியை வெல்ல வங்கதேச அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.