• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தூக்கி வீசப்பட்ட நாய்க்கு கால் முறிவு… சி.சி.டி.வி காட்சிகள்..,

BySeenu

Feb 19, 2025

இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாயின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

படுகாயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்ட நாய்க்கு சிகிச்சை !!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகம் கடந்த 8 தேதி அன்று அந்த வணிக வளாகத்தில் இரண்டாவது மாடிக்கு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஊழியர்கள் இதனை தூக்கி அங்கு இருந்து வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கௌதம் என்பவர் அந்த நாயை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார். படுகாயம் அடைந்த நாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்கு காலில் மட்டும் எலும்பு முறிவு எப்படி இருந்ததாக கூறினர். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாயில்லா ஜீவனை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி அந்த நாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது, இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை அடுத்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளதாகவும், நாய் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.