• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தானில் இன்று தொடக்கம்

ByP.Kavitha Kumar

Feb 19, 2025

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது.

ஐசிசி நடத்தும் 50 ஓவர் கொண்ட 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று வரை புள்ளிப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் இந்த போட்டிக்கு தகுதி பெற்றன.இத்தொடரில் குரூப் ஏ குழுவில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி குழுவில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த இரண்டு குழுக்களிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.இத்தொடருக்கான முதல் போட்டி பாகிஸ்தான்,நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கராச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நாளை விளையாடவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறுகிறது.

பாகிஸ்தானில் நடைபெறும் இத்தொடரில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்களால் துபாயில் நடக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் ஸ்டார் நெட் ஒர்க் மற்றும் ஜியோஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பாகிறது

.