கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு சொந்த நிலமா!?. கேட்பவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிவடையும். உள்ளத்தில் ஒரு சந்தேக கேள்வி எழும்.
குமரியில் சோனியா காந்தியின் பெயரில் சொந்த நிலம் என்பது உண்மையே, அதற்கு பின்னால் ஒரு பெரும் முயற்சியின் செயல்பாடு மறைந்திருக்கிறது.

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் ரெத்தின சிட்பண்ட் தலைமையிடமாகக் கொண்டு, குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரை குமரியின் எட்டு திக்கிலும் கிளைகளை கொண்ட ஒரு பெரிய நிறுவனம். இதன் அதிபர் கனகராஜ், இயல்பாகவே காங்கிரஸ் ஆதரவாளர். நேரு குடும்பத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். கடந்த பல சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலருக்கும் (அவரிடம் உதவி நாடி சென்றவர்கள்) அத்தனை பேருக்கும் லட்சம் பணத்தை நன்கொடையாக கொடுத்தவர்.

கனகராஜ் மனதில் இயல்பாகவே ஒரு எண்ணம் கடந்த பல காலமாக துளிர் விட்டு பெரிய ஆலமரம் போல் உயர்ந்து கிளை, விழுதுகள் பரப்பி ஏன் அடையார் ஆலமரம் போன்ற நிலையில், அவரது நண்பரும், அவரது சில அத்தியவாசியமான பணிகளை கனகராஜ் நம்பிக்கை கொண்டு கொடுக்கப்படும் மனிதர் பாக்கிய சுந்தர். இவர் துயில் கொள்ளாத மீதமுள்ள நேரம் காங்கிரஸ் கட்சியின் பணி, கனகராஜ் சொல்லும் பணிகள் என இருந்தவர்கள் இடையே யேற்பட்ட சம்பாசனையில், கனகராஜ் பாக்கிய சுந்தரிடம் தெரிவித்தது. தலைவி சோனியா பெயரில் நம்ம ஊரில் ஒரு இடம் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவரது உள்ளத்து கிடைக்கையை சொல்ல 20.18 சென்று நிலம் குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு நடந்து விட்டது.

கனகராஜ் , பாக்கிய சுந்தர், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் மூன்று பேரும் பத்திரத்துடன் டெல்லி சென்றார்கள். பிரின்ஸ் ஜி.கே வாசனிடம் நல்ல நட்பு உடையவர். அவரை நாடி சோனியா காந்தியை சந்திக்க முயன்று முயற்சிகள் முடியாத நிலையில்,
குமரி மாவட்டத்தின் மூத்த பத்திகையாளரும், காங்கிரஸ் தியாகியின் மகனுமான தாகூர் மூலம் அன்றைய நிதி அமைச்சர் பா. சிதம்பரத்தை சந்தித்து விவரம் சொல்ல. நாடாளுமன்ற கூட்டம் நடந்துக்கொண்டு இருந்த போதும்,

நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், அன்னை சோனியா காந்தியை தாகூர் உடன் சந்தித்து பத்திரத்தை கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். குமரியை சேர்ந்த கனகராஜின் ஆசையும் நிறைவேறியது.
சோனியா காந்தி வியப்பின் தடங்கள் முகத்தில் படர்ந்த நிலையில், பத்திரத்தை வாங்கி அதன் பக்கங்களின் வாசகங்களை மனதினுள் வாசித்த காட்சியை பார்த்த கனகராஜின் வாழ்நாள் சாதனையாக அந்த நொடிகள் கடந்து சென்றது. சோனியா காந்தி நகல் பத்திரத்தை மட்டும் கனகராஜிடம் திரும்ப கொடுத்தார்.

கால ஓட்டத்தில் கனகராஜ் இயற்கை எய்த நிலையில், குமரியில் சோனியாவின் பெயரில் நிலம் என்ற நினைவுகளும் மறந்த நிலையில் தான்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால் முயற்சியில். அன்னை சோனியா காந்தியின் பெயரில் உள்ள இடத்தில்”காமராஜ் பவன்” கட்ட திட்டமிட்டு.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ராபர்ட் பூரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், தாரகை கத்பட், ரூபிமனோகரன், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் அமைப்பாளர்கள், நன்கொடையாளர்கள் செய்த நிலையில், கனகராஜ் அன்னை சோனியா பெயரில் வாங்கிய இடத்தில் 18_ ஆண்டுகளுக்கு பின். சுமார் ரூ. ஒருகோடி செலவில் அழகான காங்கிரஸ் மாளிகை உருவாகியது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெயரில் சொந்த இடத்தில் செயல்பட இருக்கும் காமராஜ் பவன். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை திறந்து வைத்து, குமரி காங்கிரஸ்யின் மகிழ்ச்சியான பெருமை மிகுந்த பெருவிழாவாக நடைபெற்றது.





