பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன் மகன் பிருத்திகை (27)
பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வந்த பிருத்திகைவாசனும், அவனது கூட்டாளியான தொட்டியத்தை சேர்ந்த சுபாஷ் என்பவனும் திருச்சி மாவட்டம், முசிறி அருகே வடுகபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கிருந்த போது பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசாரால் நேற்று மாலை, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை பெரம்பலூர் நோக்கி அழைத்து வரும் போது போலீசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற பிருத்திகைவாசனுக்கு கால் முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
பிரபல ரவுடிக்கு மாவு கட்டு
