பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிரமாண்ட நட்சத்திர கலை விழா (நட்சத்திரா -2025) பிப்ரவரி 13, 1 4, மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நட்சத்திரா 2025- இன் தொடக்க நாளான நேற்று, தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று விருதுகளை வழங்கி, விருது பெற்ற ஆளுமைகளை பாராட்டி பேசினார்.
இந்த நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக கவுரவிக்கப்பட்டார்கள். செல்வி எஸ். அபூர்வா, தமிழக அரசின் முன்னாள் செயலாளர் அரசு நிர்வாகத்திலும், சமூக மாற்றத்திலும் அவருடைய முக்கிய பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது. கவிஞர் எஸ். இளம்பிறை இலக்கியத்திலும், சமூக விழிப்புணர்விலும் அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பை பாராட்டி இன்ஸபிரேஷன் ஐகான் விருது வழங்கப்பட்டது. கல்வித்துறையில், சமூக சேவையின், முக்கியத்துவத்தை முன்னிறுத்தியதற்காக. திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது குழும நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் எ. கெ. காஜா நஜுமுதீன் சிறந்த சமூக மற்றும் சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர் விருதுகள், சரண்யா சூரியப்பிரகாசம் – தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று, 2005 ஆண்டில் பட்டம் பெற்ற முன்னாள் மாணவி, தற்போது இயக்குனர் அல்சாஸினோ லைப் சயின்சஸ் மற்றும் நிர்வாக இயக்குனர், ப்ரைன்ட்ரீ கேம்பஸ், நியூடெல்லி அண்ட் இலங்கை – மருத்துவ துறையில் மகத்தான பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது மற்றும் நித்தேஷ் புஷ்பராஜ் – தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயின்று 2017 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற முன்னாள் மாணவர், தற்போது இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டிஎவி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆஸ்திரேலியா – தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறப்பாக சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
நட்சத்திரா 2025 தொடக்க நாளான, இன்றைய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று, தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அழியாத முத்திரையைப் பதித்து சமூகத்திற்கு, தங்களின் மாபெரும் பங்களிப்பை வழங்கிவரும் மாமனிதர்களுக்கு நமது அறக்கட்டளை சார்பில் விருதுகளை வழங்கி கவுரவிப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதானது அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு உணர்வு, சமூக அக்கறை ஆகியவற்றை அங்கீகரித்து, பாராட்டி வழங்கும் அன்பு விருதாகும்.

விருது பெற்ற ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் மாபெரும் ஆளுமைகள் என்பதை நாம் அறிவோம். இது போன்ற ஆளுமைகளுடன் இணைந்து, நாம் எடுக்கும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான, சமமான எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எனவே, நாம் செய்யும் அனைத்திலும் சிறந்து விளங்க, தொடர்ந்து இணைந்து, பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று பேசினார். மேலும் நேற்று சினிமா பிரபலம் நடிகை கிர்த்தி ஷெட்டி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நட்சத்திரா 2025 – இன் இரண்டாவது நாள் இன்று, பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் அசல் கோலார், பாடகி பூஜா வெங்கட் மற்றும் பாடகர் சாம் விஷால் ஆகியோர் கலந்து கொண்டு பாடவுள்ளார்கள் மற்றும் அவர்களின் குழுவில் உள்ள கலைஞர்களைக் கொண்ட ஒரு அற்புதமான இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நட்சத்திரா 2025 இன் மூன்றாவது நாள் நாளை, நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் மேலும் அந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மமிதா பைஜூ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இந்த நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரி நிர்வாக இயக்குநர்கள் நீவாணி மற்றும் நகுலன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் இயக்குனர் ராஜபூபதி,மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை உறுப்பினர்கள், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி, முதல்வர்கள், துணைமுதல்வர்கள், புலமுதல்வர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 30000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன் வரவேற்புரை வழங்கினார்.
