சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சிவகாசி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான இன்று வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சர்வ அலங்காரத்துடன் செண்பக விநாயகர் கோவிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரினில் எழுந்தருள, 11 முறை தெப்பத்தை தேர் சுற்றி வலம் வந்து தெப்ப உற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மேளதாளத்துடன் நடத்தப்பட்ட தெப்ப உற்சவ தேரோட்டத்தின் போது, திரளான பக்தர்கள் பங்கேற்று வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கி வழிபட்டனர். தெப்ப தேரோட்ட நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.





