சமயபுரம் கோவிலுக்கு ஒட்டுமொத்த கிராம மக்கள் பாத யாத்திரை சென்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சிறு மாத்தூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். அதேபோல் 27-வது ஆண்டாக சிறுமாத்தூர் கிராம மக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து 1 வார காலம் விரதம் இருந்து கிராம மக்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தனர்.

கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடைப்பயணம் மேற்கொண்டனர். அப்பொழுது பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ஜங்ஷன் பகுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் காலையில் பாதயாத்திரையாக ஞாயிற்றுக்கிழமை சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று மாரியம்மன் தரிசனம் செய்ய உள்ளனர்.

