• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Byகாயத்ரி

Nov 24, 2021

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சியில் மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன் தேசிய வங்கிகள் வாயிலாக பலருக்கு கோடிக் கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர்.ஆனால், அவர்களை சுதந்திரமாக திரிய மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, அவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பதுங்கி உள்ளவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் கொடுத்த கடன் மீண்டும் வசூலிக்கப்படும் என்பது நூறு சதவீதம் நிச்சயம்.கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பித்தவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என நிர்மலா சீதாராமன் கூறினார்.