• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைகை அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரிப்பு .வினாடிக்கு 5119 கன அடி தண்ணீர் திறப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் வினாடிக்கு 5119 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆறு , மூல வைகை ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் முல்லைப் பெரியாறில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்தேக்கத்திற்கு நேற்று முன்தினம் இரவு 5119 கன அடி நீர் வந்து சேர்ந்தது. ஏற்கனவே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த 13 நாட்களாக தொடர்ந்து  சராசரியாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீர் நீர் வரத்து அதிகரிப்பால், இரவு முதல் நேற்று காலை வரை வினாடிக்கு 5119 கன அடி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. கீழ் மற்றும் மேல் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து ஆற்றின் வழியாக செல்வதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.