• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொடைரோடு அருகே பரபரப்பு… ரவுடியை சேஸிங் செய்த போலீஸ் !

ByKalamegam Viswanathan

Jan 27, 2025

கொடைரோடு அருகே காரில் தப்பி சென்ற ரவுடிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை போலீசார் சேசிங் செய்யும் போது, ரவுடிகளின் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து, ஒரு ரவுடி படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மதுரை கோவில்பட்டி பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் காரில் தப்பி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காரில் துரத்தினார்கள்.

கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற ரவுடிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியினில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் காயம் அடைந்தார். மற்றவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

காயம் அடைந்த சுபாஷ் சந்திரபோஸை ரவுடி என்று பாராமல் மாநகர காவல் ஆணையர் தனிப்படை போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பி ஓடிய எதிரிகளை கைது செய்தும் காயம் பட்ட நபரை எதிரி என்றும் பாராமல் மனிதநேயத்தோடு உரிய நேரத்தில் சிகிச்சைக்காக சேர்த்த தனிப்படை போலிசாரின் இச்செயலை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.