மதுரையில் மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரயில்வே துறையில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை.
மதுரை அரசரடி பகுதியில் தனியார் அரங்கத்தில், மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் நெல்லை முத்துசாமி தலைமையில் மக்கள் முன்னேற்ற கட்சி
பொதுச்செயலாளர் ஜெயவேல், துணை பொதுச்செயலாளர் சங்கர்வேல் சுப்பையா,
பொருளாளர் குமார், மாநில இளைஞரணி செயலாளர் பரத், மாநில மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி மற்றும் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையில் அனைத்து மக்களும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மத்தியில் ஆளும் அரசு செயல்பட வேண்டும் மாநிலத்தில் உரிமையும் மாநில மக்களின் உரிமையும் பாதுகாக்க படும் வகையில் மத்திய அரசு மாநில அரசு மற்றும் மத்திய அரசு செயல்பட வேண்டும்.
2.தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்கள் தமிழக இளைஞர்களுக்கு 90% கட்டாயம் வேலைவாய்ப்பு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
3.நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் இல்லையெனில் நீட் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
4.பட்டியல் பழங்குடி பிரிவில் புதிதாக இணைக்கப்பட்ட சாதிப்பிரிவு மக்களின் மக்கள் தொகைக்கேற்ப் பட்டியல் பழங்குடி மக்களின் இட ஒதுக்கீரை தற்போது வழங்கப்படும் மாநில அரசின் இட ஒதுக்கீடு ஒரு சதவீதம் என்பது சமூக நீதிக்கும் எதிரானது பட்டியல் பழங்குடியை மக்கள் இரவு ஒதுக்கீடு குறைந்தபட்சம் ஐந்து சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.சுங்க சாவடி கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் கார்ப்பரேட் சுங்க சாவடி கொள்கையை மத்திய அரசு நிறுத்த வேண்டும். சுங்க கட்டணம் விதிகளை படி டோல்கேட்டுகளை வரையறை செய்ய வேண்டும். விதிகளுக்கும் புறம்மாக உள்ள டோல்கேட்களை மூட வேண்டும்.
6.மஞ்சள் மாநகரமான ஈரோடு பவானி ஜமுக்காள நகரத்தில் நூல் விலை கூடுதலாக இருப்பதால் நூல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.
7.கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் திட்டம் மக்களின் உயிருக்கு ஆபத்தான இதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
8.அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் பழனி ஆகிய கோயில்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை தடை செய்ய வேண்டும் ரூபாய் 20 மட்டும் நிர்ணயிக்க வேண்டும்.
9.கள்ள சந்தை டாஸ்மார்க்கள் தடை செய்ய வேண்டும்.
10.கனிம சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது தடை செய்யப்பட வேண்டும். கனிம சுரங்கங்களை அரசு எடுத்து நடத்த வேண்டும்.
11.உள்ளாட்சி நிர்வாக மறு சீரமைப்பில் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து உள்ளாட்சி கிராமங்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.