• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பிக் பாஸ் கோப்பையைத் தட்டித் தூக்கிய முத்துக்குமரன்!

ByP.Kavitha Kumar

Jan 20, 2025

பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்தது பிக் பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகராக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்‌ஷிதா, அர்னாவ், சத்யா மற்றும் தீபக் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றார்கள்.

கடந்த 105 நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சி நேற்று இரவுடன் நிறைவடைந்தது. இதன் இறுதியில் பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளராக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சவுந்தர்யா இரண்டாவது இடத்தையும், விஜே விஷால் மூன்றாவது இடத்தையும், ரயன் நான்காவது இடத்தையும், பவித்ரா ஜனனி ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர். பணப்பெட்டி டாஸ்க்கில் மற்ற போட்டியாளர்கள் வென்ற தொகை போக மீதமிருந்த ரூ.40.50 லட்சம் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டது,