மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அபிசேகபாண்டி மகன் தனப்பாண்டி வயது 27. இவர் 2 நாட்களுக்கு முன்பாக நண்பர்களுடன் காரில் திருச்சி பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் கார் கதவு திறந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு தனப்பாண்டி சம்பவ இடத்திலே இறந்தார். இவர் உடல் உறுப்பு தானம் செய்ததால் மதியம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யும் பொழுது உசிலம்பட்டி கோட்டாட்சியர் சண்முக வடிவேல் தாசில்தார் பாலகிருஷ்ணன் செல்லும்படி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் வருவாய் அலுவலர் மணிமேகலை கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜன்மற்றும் கிராம பொதுமக்கள் தனப்பாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.




