• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பொங்கல் தொகுப்பு வழங்கிய நகைச்சுவை நடிகர் மதுரை முத்து

ByKalamegam Viswanathan

Jan 10, 2025

சிரிக்க வைக்கும் பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுக்கணும். பொங்கல் திருநாளையொட்டி, ஏழை எளியவர்களுக்கு நகைச்சுவை நடிகர் மதுரை முத்து பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

வருகிற 14 ஆம் தேதி அன்று தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது இல்லத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விஜய் டிவியின் பிரபலம் மதுரை முத்து திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள அவரது வீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனது வீட்டில் அருகில் உள்ள ஏழை எளியவர்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவியாக கரும்பு, வேட்டி, சேலைகள் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி வழங்கினார். இவர் சமீபகாலமாக முக்கியமான பண்டிகை காலங்களில் தன் வீட்டில் அருகில் உள்ளவர்களை அழைத்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இது குறித்து மதுரை முத்து கூறுகையில்:

நான் இருக்கும் பகுதி கிராம பகுதி நான் அன்றாட நடை பயிற்சி மேற்கொள்ளும் போது என் வீட்டில் அருகில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ஆதரவற்ற முதியவர்களை தேர்ந்தெடுத்து என்னால் முடிந்த உதவியை செய்வது வழக்கம் இந்த முறை அவர்களுக்கு கரும்பு, வேஷ்டி சேலைகள் கொடுத்திருக்கிறேன் அவர்களும் சந்தோஷமாக கொண்டாடட்டும், பப்ளிசிட்டிக்காக இல்லை சின்ன ஒரு மனதிருப்திக்காக என்னைப் பார்த்து நான்கு பேர் செய்தால் அதுதான் எனக்கு வெற்றி.

திருமங்கலம் அரசப்பட்டி எனது சொந்த ஊர் அங்கு எனது பெற்றோர்கள் மற்றும் மனைவிக்காக கோயில் கட்டியுள்ளேன் இன்னும் 15 நாட்களில் அதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. அதில் 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளேன் நாம் கண்ணில் பார்க்கிறவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்தால் எனது பெற்றோர்களே என்னை வாழ்த்துவது போல் சின்ன சந்தோசம் மீண்டும் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் இந்த வருஷம் எல்லோருக்கும் சந்தோசமாக அமையும் அமையவில்லை என்றாலும் அமைய வைப்போம் பொங்கல் வாழ்த்துக்கள் என்றார்.