மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் வந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாலாஜிநகர் பகுதியில் கம்பி குடி கால்வாய் செல்லும் பாதையை அடைத்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, இன்று காலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்திருந்தனர்.


அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஆக்கிரமிப்பு அகற்ற வந்துள்ளதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி விட்டு ஆக்கிரமிப்பு என்று சொல்லக்கூடிய ஒரு சில பகுதிகளை அகற்றத் தொடங்கினர். அப்போது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தன் மீது ஊற்றிக்கொள்வதாகவும்
மிரட்டியுள்ளார். உடனே அந்த பகுதியே பரபரப்பானது. பின்னர் காவல்துறையினர் பெண்களை அப்புறப்படுத்திவிட்டு குறிப்பிட்ட இடங்களை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். அங்கு கூடியிருந்த பெண்கள்


இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், அதற்குள் அதிகாரிகள் இங்கு ஆக்கிரமிப்பு அகற்ற வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
