பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4,17,664 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை ஆகியவைகளை வழங்கும் பணியை சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4,17,664 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 638 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 166 உள்ளிட்ட 829 நியாயவிலைக்கடைகளின் வாயிலாக, மாவட்டத்தில் 4,16,597 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 1,067 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என ஆக மொத்தம் 4,17,664 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வு ஆட்சியர் துவக்கி வைத்தார். தொடர்ந்து டோக்கன் அடிப்படையில் பொருட்கள் குறிப்பிட்டுள்ள தேதிகளில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
