மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி தலைவராக உள்ள எஸ். எஸ். கே. ஜெயராமன் பிறந்தநாளை முன்னிட்டு, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திமுகவினர் சமுதாய அமைப்பினர் வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையின் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அமிர்தராஜ், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் ஜெயராமனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவரது மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். அருகில் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.