மூவேந்தர் நகர் அய்யா வைகுண்டர் பதியில் குமரி எம். பி. விஜய்வசந்த் சாமி தரிசனம்.
நாகர்கோவில் மூவேந்தர்நகர் அய்யா வழி கோவில் திருஏடு வாசிப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு நடைபெற்ற திருஏடு வாசிப்பு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்த விஜய்வசந்த் எம்.பி.அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வழிபாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டார் விஜய்வசந்த் எம்.பி.
இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவசாமி, வர்கீஸ், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.





