• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 7, 2025

மகிழ்ச்சி என்பது என்ன?

பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவியர் நண்பரிடம் 'மகிழ்ச்சி' என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார். ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் வரைந்து சித்தரித்தார். கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு, பாழடைந்த அவர்களது வீட்டின் மேற்கூரையில் மழைநீர் ஒழுகிக் கொண்டிருந்தது. ஒரு குடை அந்த மழை நீரை தடுத்துக் கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தின் நாய் கூட படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. இந்த ஓவியம் அழியாததாக உலகப் புகழ் பெற்றதாக மாறியது.

இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே..
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.
சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்களிடம் இருப்பவற்றில் நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். இருப்பதை சரியாக பயன்படுத்தினால், நினைப்பது தானாக வரும்.
நிம்மதி என்பது புற விஷயங்களில் அல்ல. அக விஷயங்களில் உள்ளது. உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி வருத்தப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் இதயம் கனமாக இருக்கும் போதெல்லாம், இந்த ஓவியத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் திருப்தியாகவும் நிம்மதியாகவும் தூங்குங்கள்.