• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மூர்த்தி அதிரடி அறிவிப்பு

ByP.Thangapandi

Jan 6, 2025

உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்து, வரும் மூன்று மாதத்திற்குள் தமிழ்நாடே உசிலம்பட்டியை திரும்பி பார்க்கும் வகையில் உசிலம்பட்டியில் முக்கிய நிகழ்ச்சி உள்ளது என அமைச்சர் மூர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லம்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு கரவை மாடுகள், ஆடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள், பொங்கல் பரிசு பொருட்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முன் பேசிய அமைச்சர் மூர்த்தி.,

தமிழ்நாட்டின் வெற்றியோ தோல்வியோ அதை முன்கூட்டியே சொல்லும் தொகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது. இந்த பகுதி மக்கள் மனதில் பட்டதை மட்டுமே சொல்வார்கள். அதனாலேயே முதல் இடத்தில் உசிலம்பட்டி உள்ளது.

போட்டி போட்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். போட்டி போட்டு வேலை பார்ப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் கழகம் துணையாக இருக்கும்.

முதல்வரின் தேர்தல் பரப்புரையின் போது உதயநிநி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒரு தொண்டனாகவே உழைத்தார்.

உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர் துணை முதல்வர். இன்னும் மூன்றே மாதத்தில் தமிழ்நாடே உசிலம்பட்டி தொகுதியை திரும்பி பார்க்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி தயாராகி வருகிறது, விரைவில் அறிவிக்கிறோம் என பேசினார்.