• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்ஏற்பாடு பணிகள்

ByKalamegam Viswanathan

Jan 5, 2025

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் எட்டு நாள்கள் உள்ள நிலையில் அதற்கான முன்ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கல் அன்று ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கானது அடுத்தடுத்து நடைபெறும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 51லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கடந்த 2ம் தேதி அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி மேயர் ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் பந்தல் கால் நடப்பட்டது.

இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பரிசோதனை மையத்தில் தடுப்பு வேலி, விழா மேடை , குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.